|
1. மாஸ்டக்டமி செய்வதிலுள்ள இடர்பாடுகள் என்ன ?
எந்த அறுவை மருத்துவம் என்றாலும் அதில் வர வாய்ப்புள்ள
சில இடர்பாடுகள் உள்ளன. அவையாவன:
- தொற்றுநோய்,
இரத்தக்கசிவு போன்ற காயம் ஆறுதலில் உள்ள இடர்பாடுகள்.
- தோள்
விரைத்துப்போதல்.
- மரத்துப்
போதல். மாஸ்டக்டமி சூடந்த பிறகு வழக்கமாக ஏற்படுவதைப்போல.
அறுவை நடந்த இடத்திலுள்ள தோலும் அக்குள் பகுதியிலும்
சிறிது மரத்துப்போகும்.
- செரோமா
(Serome)
: அறுவை காயத்திலிருந்தும் அக்குளிலிருந்தும் வடியும்
நிணநீரை, தனிச்சிறப்பு மருத்துவ மனையில் ளெதில் வடித்து
எடுத்து விடுவார்கள்.
- லிம்ப்டோம்
(lymphedome)
: என்பது 10-20 சதவீத நோயாளிகளுக்கு ஏற்படும் நீண்டகால
லேசான வீக்கம்.
- தோல்
அழுகல் - (Skin necrosis)
: சில சமயங்களில் தோல் முனையில் சில பகுதி நன்றாக
ஆறாமல் அழுகுவதைப்போல ஈரமாக இருக்கும். எனினும் தினமும்
சுத்தப்படுத்தி, மருந்திட்டு, கட்டுவதின் மூலம் அதைக்
குணமாக்க முடியும்.
2. எனக்கு மாஸ்டெக்டமி
நடைபெற்ற பிறகு அடுத்த மார்பகத்தில் புற்று நோய் வரும்
வாய்ப்புள்ளதா ?
ஆமாம். அடுத்தடுத்த
நீங்கள் மருத்துவரை சந்திக்கும் போது வழக்கமான பரிசோதனைகளும்,
மம்மோகிரம் களும் நடத்தப்படும். மாதந்தோறும் நீங்களே சுயமாக
பரிசீலித்துப் பாரத்துக் கொள்ளுங்கள். இரு புறங்களையும்
உற்றுப் பாருங்கள். மாதத்திற்கு மாதம் ஏதேனும் மாற்றங்கள்
காணப்பட்டால் உங்கள் மருத்துவரிடம் கூறுங்கள்.
3. ஆறுவை நடைபெற்ற
கை மரத்துப்போதலோ, வலியையோ வீக்கமோ இருப்பதை உணர்ந்தாலோ,
மூன்று நாட்கள் காய்ச்சல் தொடர்ந்து இருந்தாலோ நானென்ன
செய்ய வேண்டும் ?
இயன்ற விரைவில் உங்கள்
மருத்துவரைச் சந்தித்துப் பேசுங்கள்.
4. நான் எங்கே
செயற்கை மார்பகத்தைப் பொருத்திக் கொள்ள இயலும் ?
CGH
ரீடைல் பார்மஸி (போன் எண் 6850 1889) மற்றும் சிணீஸீநீணீக்ஷீமீ
(போன் 6736 3168) இவ்விடங்களிலிருந்து செயற்கை மார்பகங்களைப்
பெறலாம்.
5. மார்பகப்
புற்று துணைக்குழு (Breast
cancer support camp)
- வில் நான் எங்கே சேரலாம் ?
Breast Cancer Support
Groups:
a) CGH Breast Support Group
b) Breast Cancer Foundation
c) Singapore Cancer Society
|