Health Information

Maklumat Kesihatan

Interactive Patient Guide

Panduan Pesakit Interaktif

Skills for Life - Homecare
Health Check Online
 
 
 
 
 
Select  
 

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்

Page 1 | Page 2 | Page 3 | Page 4

மார்பகப் புற்று நோய்க்கு மருத்துவம் எது ?
 


மார்பகப் புற்று நோயின் மருத்துவம், கபடியின் அளவு, இருப்பிடத்தைப் பொறுத்து, பரிசோதனை காலையின் பரிசோதனை முடிவுகளையும், நோயுள்ள படி நிலையையும், நோயன் தன்மையைப் பொறுத்தும் அமையும் மருத்தும் என்பது தணிப்பட்டது அல்லது முறைமையானது. ஒன்றோ அல்லது பல இணைந்த மருத்துவத்தை ஒருவர் பெறலாம். உங்கள் மருத்துவ திட்டர்றைப்பற்றி உங்கள் மருத்துவம் உங்களுடன் விளக்குத் தூறுவார்.

லோகல் மருத்துவம்:-

ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள புற்றுநோய் அணுக்களை நீக்கவோ, அழிததலோ கட்டுபடுத்துதலோ இந்த வகை மருத்துவத்தின் தன்மையாகும். அறுவை மருத்துவம், அதிரொலி பாய்ச்ச மருத்துவங்கள் இந்த வகை மருத்துவத்துக்குட்பட்ட மருத்துவமாகும்.

அறுவை மருத்துவம்
அறுவை மருத்துவம் என்பது மார்பகக் புற்று நோய்க்கான மிகச் சாதாரணமான மருத்துவ முறையாகும். இந்த அறுவை மருத்துவத்தின் பயன்கள், சிக்கல்கள், எதிர்பார்க்கும் முடிவுகள் குறித்து உங்கள் மருத்துவர் உங்களுக்கு விளக்குவார்.

அறுவை மருத்துவத்தின் வகைகள்:-

அ. லம்பாக்டமி (
Lumpectomy)
இந்த வகை அறுவை மருத்துவத்தில் மார்பகம் அப்படியே இருக்கும் மார்பகக் கட்டியும், அதைச் சுற்றியுள்ள சாதாரண இழைமங்கள் சிலவும் அறுத்து அகற்றப்படும்.

ஆ. மாங்டெக்லொமி (Mastectomy)
இதில் பல வகைகள் உள்ளன. அவை யாவன.

சாதாரண மாஸ்டெக்டமி (Simple mastectomy)
இந்த முறையில் அக்குளிலுள்ள லிம்ப் நோட்களைச் சுத்தப்படுத்தி, பத்திரப்படுத்தி விட்டு மார்பகத்தை அறுத்து முழுதும் அகற்றப்படும்.

 


ரேடிகல் மாஸ்டெக்டமி:-

இந்த முறையில் மார்பகம் முழுவதும் அக்குளுக்குரிய லிம்ப் நோட்களும் சிறிது மார்பக சுற்று சதையும் அறத்து அகற்றப்படும். புற்றுநோய் மார்பக சற்றுகதையில் பரவியிருந்தால் மட்டுமே இந்த அறுவை நடத்தப்படும். பெரும்பாலான ஸ்டெக்டமி நோயாளிகளுக்கு அந்த அறுவை மருத்துவத்தின் போதோ அல்லது சில மாதங்களுக்குப் பிறகுச் செய்யப் படம் தனி அறுவை மருத்துவத்தின் போது மாபக மீட்டுரு வாக்கம் (re constriction) செய்யப்படும்.

 

மாடிபைட் ரேடிகல் மாஸ்டெக்டமி (Modified)

இந்த முறையில் மார்பகமும் கை அக்குளின் கீழுள்ள சில லிம்ப் நோட்களும் அறுத்து அகற்றப் படும். மார்பு சைதைகளும், அப்படியே பத்திரமாக விட்டு வைக்கப் படுவதால் மார்பகச் சுவற்று வெளித் தோற்றமும், கையின் ஆற்றலும் பாதிக்கப் படாது. எளிதில் சீராகி விடும். இதுதான் தரமான மாஸ்டெக்டமி முறையாகும். இதில் அக்குளின் கீழுள்ள லிம்ப் நோட்கள் அகற்றுவதுடன் கூடிய சாதாரண மாஸ்எடக்டமியும் அடங்கும்.


கதிர்பாய்ச்சு மருத்துவ முறை (Radiation thoraphy)
ரேடியேஷன் தெரபியில் (இதை ரேடியோ தெரபி என்றும் கூறுவார்கள்) புற்றுநோய் அணுக்களை அழித்து அவை மேலும் வளராமல் தடுப்பதற்கு ஆற்றல் வாய்ந்த எக்ஸ்-ரேக்களைப் பயன் படுத்துவார்கள். இந்தக் கதிர்கள் சாதாரணமாக வெளியிலுள்ள ரேடியோ பொருட்களிலிருந்து வெளிவந்து இயந்திரத்தின் உதவியால் மார்பகத்தை நோக்கிப் பாய்ச்சப் படுவதால் வெளிபுற கதிர்வீச்சு (
External rerdiction) என்று கூறப்படும். கதிர் பாய்ச்சு மருத்துவ முறை இப்போது பெரும்பாலும் லிம்பெக்டமி உதவியுடன் இணைந்து தரப்படுகிறது. இது மெஸ்டெக்டமிக்குப் பிறகு பெரிதும் தேவைப் படுவதில்லை.

சிஸ்டமிக் டிரீட்மெண்ட்:-

உடலமைப்பு முழுதும் சார்ந்த இந்த மருத்துவத்தில் கீழ்க்கண்டவை அடங்கும்.

1. கீமோ தெரபி
புற்று அணுக்களை அழிக்க மருந்துகளைப் பயன்படுத்துவது இம்முறை மருத்துவமாகும். இது வழக்கமாக மருந்துகளின் கலவையாகும். இம்மருந்துகளின் வாய் வழியாகவோ, ஊசியின் மூலமோ தரப்படும். கீமோ தெரபி உடலமைப்பு முழுதும் சார்ந்த மருத்துவ முறையாகும். ஏனென்றால் தரப்படும் மருந்துகள் இரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுதும் பயணம் செய்யும். இது சுழற்சியாக தரப்படும். அதாவது மருத்துவ காலம், தேறும் காலம் மீண்டும் மருத்துவ காலம் என்று விட்டு விட்டு ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும்.

2. உறர்மோனல் தெரபி
புற்றுநோய் அணுக்கள் தாங்கள் வளர தேவையான உறார்மே £ன்களிடமிருந்து தள்ளி வைக்கும் மருத்துவ முறையாகும். இந்த மருத்துவத்தில் உறார்மோன்கள் பணி செய்யும் முறையை மாற்றும் மருந்துகள் பயன் படுத்தப்படும். இதில் பெண் உறார்மோன்களை உற்பத்தி செய்யும் கருப்பையை அகற்றும் அறுவை மருத்துவமும் அடங்கும். அது உடலமைப்பு முழுதும் சார்ந்த மருத்துவ முறையாதலால் உடல் முழுதுமுள்ள புற்று நோய் அணுக்களை பாதிக்கும்.

 

மருத்துவ மனையில் என்ன நடக்கும்?


கீழ்க்கண்டவை நீங்கள் மாஸ்டெக்டமி செய்து கொள்ளப் கொள்ளபவராக இருப்பின் நீங்கள் பெறப் போகும் குறிப்புகள் விவரம்

தனி சிறப்பு வல்லுநரின் மருத்துவம் நடை தனி மருத்துவ மனையில்

  • உங்களுடைய மருத்துவர் உங்கள் நோய் வரலாற்றைக் கேட்டறிவார். அறுவை மருத்துவத்தின் தன்மையையும் அதிலுள்ள சிக்கல்களையும் உங்களுக்கு விளக்குவார்.
  • நீங்கள் அறுவை மருத்துவத்திற்குத் தகுதியானவர் தானா என்பதைக் கண்டறிய உங்களின் இரத்தம் சிறிது பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்படும்.
  • நீங்கள் 40 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருப்பின் கிழ்க்கண்ட பரிசோதனைகள் நடைபெறும். உங்கள் இதயத்துடிப்பைப் பரிசீலிக்க எலக்ட்ரோ கார்டியோகிராம் (ணி..சிநி) பரிசோதனையும், உங்களுடைய நுரையீரல், சரியாக உள்ளனவா என்பதை உறுதிப் படுத்த மார்புற எக்ஸ்-ரேவும் எடுக்கப்படும்.
  • உங்கள் மருத்துவ தாதி மருத்துவமனையில் நீங்கள் எவ்வளவு காலம் தங்க வேண்டி வரும் என்பதையும், எவ்வளவு செலவாகும் என்பதையும் உங்களுக்கச் கூறுவாள்.
  • ஒரு மயக்க மருந்து வல்லுநர் மார்பக தாங்கு பிரிவிலிருந்து (breast support group) வந்து உங்களை மானசீகமாக அறுவை மருத்துவத்திற்கு ஆயுத்தப் படுத்துவார்.

அனுமதி பெறும் நாளில்

  • நீங்கள் படுக்கைத் தொகுதிக்குள் (Ward) வந்ததும் வசதியாக தக்க மருத்துவ தாதி ஏற்பாடுகள் செய்து தருவாள். பின்னர் உங்களுடைய எடை, உடல் வெப்பநிலை, நாடித் துடிப்பு, சுவாசிக்கும் அளவு, இரத்த அழுத்தம் முதலியவற்றைப் பரிசீலிப்பாள்.
  • படுக்கை தொகுதியின் மருத்துவர் உங்கள் நோய் வரலாற்றைக் கேட்டறிந்து உங்களைப் பரிசோதி- ப்பார். அவர் உங்களுக்குச் செய்ய வேண்டிய தன்மை, சிக்கல்களை விளக்கி அறவை செய்ய உங்கள் அனுமதியைப் பெறுவார்.
  • மயக்க மருந்து வல்லுநர் நீங்கள் அறுவை மருத்துவத்திற்கு தகதியானவர் தானா என்று மதிப்பீடு செய்வார்.
  • ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் அறுவை மருத்துவத்திற்கு நீங்கள் தகதியானவர் என்று உறதி படுத்தாது இருப்பின் பரிசோரிக்க உங்கள் இரத்தத்தைச் சிறிது எடுத்துக் கொள்ளப்படும்.
  • பொதுவாக இரவு 12 மணிக்குமேல் நீங்கள் எதையும் உண்ணவோ, குடிக்கவோ கூடாது என்று உங்கள் மருத்துவ தாதி கூறுவாள்.
  • உங்கள் மருத்துவ தாதி உங்களுக்கு கீழ்க்கண்ட விவரங்களை தருவாள்
  • நீங்கள் அறவை மருத்துவ அறையில் இருக்கும் போது என்ன எதிர் பார்க்கப்படும்?
    உங்கள் அறவை மருத்துவத்திற்கு பிறகு நீங்கள் விழித்த பின்னர் என்ன எதிர் பார்க்கப்படும்?

அறுவை பெறும் நாள்

அறுவை மருத்துவத்திற்கு முன்னர்

  • நீங்கள் உணவோ, பானியமோ எடுத்துக் கொள்ளக் கூடாதென்று நினைவுறுத்தப் படுவீர்கள்
  • உங்களுடைய அறுவை மருத்துவத்திற்கு முன்னர்தலைக்கு ஊற்றிக் கொள்ள- வும்
  • அறுவைக்கு முன்னர் உங்களிடமுள்ள விலை மதிப்புள்ள பொருட்களை உங்கள் மருத்துவதாதியிடம் பத்திரப்படுத்துமாறுகூறுவார்.
  • அறுவை மருத்துவ அறைக்குள் நீங்கள் போகுமுன்னர் அதற்குரிய கவுனை எடுத்து அணியுமாறு கேட்டுக் கொகள்ளப் படுவீர்கள்.
  • மருத்துவ தாதி உங்களை உங்கள் படுக்கையிலிருந்து ஒரு தள்ளுவண்டியில் படுக்க வைத்து அறவை மருத்துவ அறைக்குள் தள்ளிச்செல்வாள்.

அறுவை மருத்துவ அறையில்

  • உங்களுக்கு அதிகமாக குளிரெடுத்தால் மற்றொரு கம்பளியையும் தருமாறு கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.

அறுவை மருத்துவத்திப் பின்னால்

  • படுக்கைத் தொகுதியில் நீங்கள் கூர்ந்து கவனிக்கப் படுவீர்கள்.
  • அதிகமாக வடியும் இரத்தத்தை அல்லது நிணநீரை வடிக்க அறுவை நடக்கும் இடத்தில் ஒரு குழல் (Tube) உள்ளே வைக்கப்படும்.
  • மயக்க மருந்தின் பக்க விறைவாக நீந்ஙகள் வாவந்தி யெடுக்கலாம் அல்லது அறத்த இடத்தில் வலியை உணரலாம். அவற்றை உங்கள் மருத்துவ தாதியிடம் தெரிவியுங்கள். நீங்கள் மிகவும் அமைதியுடன் இருக்க அவர் மருத்துவ ஊசியைப் போடுவாள்.
  • மயக்க மருந்து தீருவதற்காக அறுவை மருத்துவம் நடந்து முடிந்த 6 மணி நேரம் வரை நீங்கள் படுக்கையில் படுத்திருக்க வேண்டும். எனினும் நீங்கள் நன்கு இருப்பதாக உணர்ந்தால் எழுந்து உட்காரவோ படுக்கையைச் சுற்றி மெல்ல நடக்கவோ நீந்ஙகள் ஊக்கிவிக்கப்படுவீர்கள்.
  • உங்கள் மருத்துவரின் குறிப்பின் படி உங்களுக்கு பானமோ, உணவோ தரப்படும்.

அறுவை மருத்துவம் நடந்து முடிந்த 1-6 நாட்களில்

  • அறவை மருத்துவம் நடந்த இடத்தில் அளவான இயக்கம் இருப்பன உணர்வீர்கள்.
  • குப்பியில் 20 மி,லி,க்கும் குறைவான அளவு வடிநீர் இருந்தால் அது அகற்றப்படும்.
  • அறவை நடந்த பக்கத்தில் உள்ள தோளும், கையும் ஆற்றலைப் பெறவும், அசைவைப் பெறவும் மார்பக ஆலோசகரோ அல்லது பிசியோ தெரபிஸ்டோ உங்களுக்குச் சில எளியி பயிற்சிகளைச் சொல்லிக் கொடுப்பார்.
  • அறுவை நடந்த இடத்தில் வலியிருந்தால் உங்கள் மருத்துவ தாதிக்குச் சொல்லுங்கள். அந்த வலியைப் போக்க அவள் உங்களுக்கு ஒரு மருந்து ஊசி போடக் கூடும்.
  • புற்று அணுக்கள் பரவியுள்ளனவா எனப்பதைப் பரிசீலிக்கக ஒரு எலும்பு ஸ்கேன் எடுக்கவும், ஈரலில் அதிரொலி பரிசோதனைக்கும் நீங்கள் அனுப்பபடுவீர்கள்.

மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பும் நாள்

  • உங்கள் மருத்துவர் உங்களைப் பரிசீலித்து நீங்கள் நலமாக இருந்தால் வீட்டிற்கு அனப்புவார்.
  • உங்களுக்குத் தேவையான மருந்துகளை மருத்துவர் எழுதித்தருவார். அம்மருந்துகளை எப்படி பயன் படுத்த வேண்டுமென்பதை மருத்துவக் கடைக்காரர் விளக்குவார்.
  • உங்கள் மருத்துவ தாதி உங்களுக்கு ஒரு விடுப்புக் கடிதமும், மருத்துவ சான்றிதழும், மறுமுறை மருத்துவரை எந்த நாளில் சந்திக்க வேண்டும் என்ற விவரத்தையும், மருத்துவ மனையிலிருந்து நீங்கள் போகுமுன்னர் தருவாள்.
  • நீங்கள் மருத்துவ மனையில் இருக்கம் போது செய்யப்படாததிருந்தால் தீஷீஸீமீ sநீணீஸீ செய்யவும், ஈரலில் அதிர்வொலி பரிசோதனை செய்ய வேண்டிய நாளையும் பிற விவரங்களையும் உங்களுக்குத் தெரிவிப்பாள்.
  • மருத்துவரின் தனி சிறப்பு தனியார் மருத்துவமனையில் அறுவை மருத்துவ மருத்துவரை நீங்கள் காண வேண்டிய நாள் விவரமும் தரப்படும்.

குறிப்பு:
வடிகால் குப்பி விலக்கப் படுவதைப் பொறுத்து நீங்கள் மருத்துவ மனையிலிருந்து அனப்பப்படும் நாள் ஆதாரப்பட்டிருக்கும். நீங்கள் நலமாக இருந்தால் நீங்கள் வடிகால் குப்பியுடனேயே நீங்கள் வீட்டிற்குப் போகலாம். அதை எவ்வாறு கவனித்துக் கொள்வது என்பது குறித்து மருத்துவ தாதி உங்களுக்கு கற்றுக் கொடுப்பாள். மருத்துவரது தனிச் சிறப்பு மருத்துவ மனையின் மருத்துவர் அவற்றை நீக்கலாமா என்பதையும் நிர்ணயிப்பார்.



Page 1 | Page 2 | Page 3 | Page 4