குடல் முளை அழற்சி என்றால் என்ன ?
கடுமையான குடல் முளை அழற்சியானது குடல் முளையின் கொதிப்பாகும். இது அறிந்தன வற்றுள் மிகச் சாதாரணமாக உடனுக்குடன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய ஒ ன்றாகும். இது எந்த வயதிலும் யாருக்கும் வரலாம். எனினும் பொதுவாக 10 முதல் 30 வயதுக்குள் வரக்கூடும். |
தீவிர குடல் முளை அழற்சி தோன்ற காரணங்கள் யாவை ?
குடல் முளை அ ழற்சியானது குடல் முனையின் உள் வாயிலில் பொதுவாக, மலத்துண்டால் வழியடைப்பு ஏற்படுவதால் உண்டாகிறது. அரிதாக 'லிம்பாயிட் ' இழைகளின் வீக்கத்தாலும் கட்டி ஏற்படுவதாலும் குடல் முளை அழற்சி ஏற்படக்கூடும்.
தடை ஏற்படும் போது குடல் முளையினுள் அழுத்தம் அதிகரித்து இரத்த அளிப்பு துண்டிக்கப்படுகிறது. இதனால் சீழ்ப் புண்ணாதலும், 'பாக்டீரியா ' வால் தொற்று நோயும், இறுதியாக தசையமுகி உட்பகுதிகள் அழிந்து குடல் முளையில் அழற்சி உண்டாகிறது.
 |
 |
 |
| Faecolith obstructing the lumen. |
Obstructed appendix causes a build-up pressure. |
Bacterial infection sets in |
இதன் நோய்க்குறிகள் என்ன ?
சிறப்பாக, வலியானது வயிற்றின் மத்தியில் சுளுக்காகத் தொடங்கி, காலப் போக்கில் வலப்புறமாக நகரும். காய்ச்சல், குளிரெடுத்தல், உடல் நடுக்கம், பசியின்மை, வாந்தி, சில சமயங்களில் பேதியும் உண்டாகும்.
எனினும் 5 வயதுக்குட்பட்ட, 50 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு மேலே கூறப்பட்டதற்கு மாறாக வேறு வித நோய் அறிகுறிகள் தோன்றக்கூடும். இவை நோய் ஆய்வுறுதியில் (பீவீணீரீஸீஷீsவீs) சிக்கலை உண்டாக்கக்கூடும்.
கடும் குடல் முளை அழற்சி இருப்பதை உங்கள் மருத்துவர் எவ்வாறு நோய் ஆய்வுறுதி செய்வார் ?
உங்கள் மருத்துவர் கடும் குடல் முளை அழற்றி இருப்பதைக் கீழ்க்கண்ட முறைகளில் ஆராய்ந்து ஆய்வுறுதி செய்வார்.
- நோய் தொடர்புடைய முழு வரலாற்றை ஆராய்தல்.
- கவனமான மருத்துவ பரிசோதனை செய்தல் - உங்கள் வயிறு மென்மையாக உள்ளதா, வயிற்றுத்தசை இறுகியுள்ளதா என்பதைப் பரிசோதிப்பது.
- உங்கள் நோய் நிலைமயைச்சீராக மறு பரிசீலனை செய்வது.
உலகெங்கும் பெற்றுவரும் ஆய்வுகள், நோயாளியின் நோய் மதிப்பீடுதான் குடல் முளை அழற்சியின் நோய் ஆய்வுறுதிக்குபயன்படும் முக்கிய காரணங்கள் என்று காட்டியுள்ளன.
கடும் குடல் முளை அழற்சியினால் ஏற்படும் சிக்கல்கள் என்ன ?
குடல் முளை அழற்சி முதிர்ந்தால் குடல் முளை முறிந்து அதன் விளைவாக வயிற்றின் உட்புறப்பகுதிகளில் சீழ்க்கட்டி ஏற்படும். அல்லது வயிற்றின் உட்பகுதி முழுவதிலும் தொற்று நோய் பரவட்கூடும். |
தீவிர குடல் முளை அழற்சிக்கு (Appendicitis) மருத்துவம் என்ன ?
தீவிர குடல் முளை அழற்சியானது, அடிவயிற்றில் எரிச்சலெடுக்கும் குடல் முளையை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி, அங்குள்ள நச்சுத் திரவத்தை நீக்குவதன் மூலம் குணப்படுத்தப் படுகிறது. இம் மருத்துவ முறைக்குக் குடல் முளை அகற்றல் (appendicectomy) என்று பெயர். தீவிர குடல் முளை அழற்சி உள்ளதைப் பரிசோதனையில் உறுதி செய்து கொண்டபின்னர் பொதுவாக நரம்புவழி நோய் எதிர்ப்புப் பொருட்கள் (antibiotics) ஏற்றப்படும்.
குடல் முளை அகற்றல் பணி எவ்வாறு செய்யப்படுகிறது ?
சாதாரண மயக்க மருந்து கொடுத்தபின்னர், அடிவயிற்றில் வலப்பக்கத்தின் கீழ்ப் பருதியில் 6 செ.மீ. நீளத்திற்கு அறுக்கப்படும். அந்த வெட்டின் வழியே குடல் முளை அறுத்து அகற்றப்படும். அதன் பின்னர் அந்த வெட்டு, தைத்து மூடப்படும்.
இதற்கு மாற்றாக, சில சமயங்களில் 'லேப்ரோஸ் கோபிக் ' முறையும் பயன்படுத்தப்படுகிறது. இம் முறையில் அடிவயிற்றுப் பகுதியில் 3 (அ) 4 சிறு துளைகள் போடப்பட்டு அதன் வழியே லேப்ரோஸ்கோப்பைப் பயன்படுத்தி குடல் முளை அகற்றப்படுகிறது.
இந்த அறுவை சிகிட்சைக்கு நான் எவ்வாறு ஆயத்தமாக வேண்டும் ?A&E துறையில்
- உங்களுடைய மருத்துவர் உங்களுடைய நோய் பற்றிய முழு விவரங்களையும் கேட்டறிவார்.
- தொற்று நோய் உள்ளதா என்று அறிந்து கொள்ளவும், பிற வியாதிகள், நிலைமைகளிலிருந்து வேறு படுத்திக் கொள்ளவும் உங்களுடைய இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைக்காக எடுத்துக் கொள்வார்கள்.
- நீங்கள் 40 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பின், நீங்கள் அறுவை சிகிச்சையைத் தாங்கிக்கொள்ள வல்லமை படைத்தவரா ? என்பதையும் உங்களுடைய
- ஈ.ஸி.ஜி. (Electro Cardio Gram) மற்றும்
- மார்புப்புற எக்ஸ்ரேபடம் முதலியவற்றையும் பரிசோதித்திறியப்படும்.
- கீழ்க்கண்ட விவரங்களை மருத்துவ தாதி உங்களுக்குச் சுருக்கமாக விளக்குவார்.
- நீங்கள் மருத்துவ மனையில் எத்தனை நாட்கள் தங்க வேண்டி வரும்.
- மருத்துவ மனையில் நீங்கள் தங்கினால் ஆகக்கூடிய செலவினங்கள்.
மருத்துவ மனையில் சேரும் நாள்/அறுவை மருத்துவம் நடக்கும் நாள்:
- நீங்கள் படுக்கைத் தொகுதிக்குள் (வார்டுக்குள்) வந்ததும் வசதியாகத் தங்க மருத்துவ தாதி தக்க ஏற்பாடுகளைச் செய்து தருவாள். பின்னர் உங்களுடைய எடை, உடல் வெப்ப நிலை, நாடித்துடிப்பு, சுவாசிக்கும் அளவு, இரத்த அழுத்தம் முதலியவற்றைப் பரிசோதிப்பாள்.
- உங்களுடைய மருத்துவர், உங்கள் நோய் வரலாற்றைக் கேட்டரிந்து, உங்களைப் பரிசோதிப்பார்.
- உங்களை உண்ணாமலிருக்கும்படி சொல்லுவார்கள். மருத்துவர் உங்கள் நரம்பு வழியே ஊட்டச் சத்துவை ஏற்றுவார்.
- நோயுறுதி செய்து முடிவு செய்வதற்கு முன்னர் நீங்கள் பன்முறை பரிசோதிக்கப் படுவீர்கள்.
- தீவிர குடல்முளை அழற்சிதான் என்று நோயுறுதி செய்யப் பட்டதும் மருத்துவர் உங்களுக்குச் செய்ய வேண்டிய மருத்துவ திட்டத்தையும் அறுவை மருத்துவத்தின் தன்மையையும் உங்களுக்கு விவரிப்பார். அதிலிலுள்ள சிக்கல்களையும் அவர் விளக்குவார்.
- நரம்புவழி நோயெதிர்ப்புப் பொருள் உங்களுக்கு ஏற்றப்படும்.
- ஏற்கனவே ஏ& ஈ. துறையில் உங்கள் இரத்தப் பரிசோதனை நடைபெறாதிருந்தால் பரிசோதனைகளுக்காக உங்கள் உடலிலிருந்து சிறிது இரத்தம் எடுத்துக்கொள்ளப் படும்.
- கீழ்க்கண்ட விவரங்களை மருத்துவ தாதி உங்களுக்கு அளிப்பார்.
- நீங்கள் அறுவை மருத்துவ அறையில் இருக்கும்போது என்னவாகும் ?
- அறுவை மருத்துவத்திற்குப் பின்னர் நீங்கள் விழுத்துக் கொன்டபின்னர் என்னவாகும் ?
- உங்களிடமுள்ள விலை மதிப்புள்ள பொருட்களை உங்கள் மருத்துவ தாதியிடமோ அல்லது உங்கள் உறவினரிடமோ கொடுத்துப் பத்திறபடுத்துங்கள்.
- அறுவை மருத்துவ அறைக்குள் நீங்கள் போகுமுன்னர் மருத்துவமனை அங்கியை (கவுனை) அணிய வேண்டும்.
- உங்களை ஒரு 'நர்ஸ்' ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்வார்.
- அங்குள்ள மற்றொரு 'நர்ஸ்' உங்களுடைய பெயர், பிற விவரங்களையும் 'செக்' செய்வார்.
- ஆறுவைச்சிச்சைக்குப் பிறகு நீங்கள் அறுவைசிகிட்சையறையை ஒட்டியுள்ள களைப்பு நீங்கு அறையில் (ஸிமீநீஷீஸ்மீக்ஷீஹ் suவீtமீ ) - தீவிரமாகக் கண்காணிக்கப் படுவீர்கள். இரத்தக் கசிவு, மூச்சுத் திணறல் முதலான உடனடி அறுவைச் சிகிச்சைச் சிக்கல்கள் இல்லையென்று உறுதியானதும் நீங்கள் உங்கள் வார்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு; தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவீர்கள்.
- அறுவைசிகிச்சைக்குப் பின்னர், மயக்கமருந்து கொடுத்ததின் பின் விளைவாக நீங்கள் வாந்தி யெடுக்கக்கூடும் அல்லது அறுவை ஆன உடற்பகுதியில் வலியை உணரக்கூடும். அத்தகைய அறிகுறிகள் ஏதேனும் தோன்றினால் உடனே உங்களுடைய 'நர்ஸ§க்குத்' தெரிவியுங்கள். நீங்கள் வலியை மறந்து நிம்மதியை அடையும் வண்ணம் அவள் உங்களுக்கு ஊசியைப்போடுவார்.
- நீங்கள் இரும நேர்ந்தாலோ, அல்லது வேண்டியிருந்தாலோ அறுவை சிகிச்சையான உடற் பகுதியை லேசாகத் தாங்கி பிடித்துக் கொள்ள வேண்டும். இதனால் வலியை வெகுவாகக் குறைக்க ஏதுவாகும்.
- உங்களுடைய அடிவயிற்றினைப் பரிசீலித்துக் குடல் இரைச்சல் ஏதேனும் உள்ளதா என்பதை மருத்துவர் கண்டறிவார். இது நீங்கள் ஏதேனும் திரவ உணவை ஏற்க ஆயத்தமாக உள்ளீர்களா என்பதை உணர உதவும்.
அறுவை சிகிச்சை நடந்த மறுநாள் :-
- மருத்துவர், அறுவை சிகிச்சை நடைபெற்ற உடற் பகுதியையும், அறுவை காயத்தின் வழக்கமான செயல்பாட்டையும் பரிசீலித்து, ஏதேனும் சிக்கல்கள் உள்ளனவா என்று கவனிப்பார்.
- நீங்கள் முதலில் திரவ உணவையும், படிப் படியாக, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கூழ் பாங்கான உணவையும், சாத உணவுப் பொருட்களையும் உண்ணத் தொடங்க வேண்டும்.
- நீங்கள் திரவ உணவினை நன்கு ஏற்கத் தொடங்கியதும் நரம்பு வழி 'குளூகோஸை' ஏற்றுவதை நிறுத்தி விடலாம்.
- நீங்கள் விரைவில் குணமடைய வேண்டு மென்றால், நடப்பது மிகவும் இன்றியமையாதது. நீங்கள் படுக்கையிலிருந்து கீழிறங்கி சற்றுத் தூரம் முயல வேண்டும்.
- அறுவை சிகிச்சை நடந்த பகுதியினை சுற்றியுள்ள தசைபகுதிகளுக்கு மிக்க சோர்வை ஏற்படுத்துமாகையால் பளுவான பொருட்களைத் தூக்குவதையும், கடினமான செயல்களையும் தவிர்க்க வேண்டும். எனினும் இலேசான/எளிய உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
- அறுவை காயத்தினை எவ்வாறு கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதனையும் கன்றிப் போதல், வீங்குதல் முதலான காயத்தின் தொற்று நோய் அறிகுறிகள் தோன்றுகிறதா என்பதைப் பரிசீலிக்கவும் 'நர்ஸ்' உங்களுக்குக் கற்றுக் கொடுப்பார்.
மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்ப அனுமதிக்கும் நாள்:
- உங்களால் நன்கு உணவு உட்கொள்ள இயலும் போதும், அறுவை சிகிட்சை நடந்த உடற்பகுதியில் தொற்று நோயின் அறிகுறிகள் இல்லாத போதும், நீங்கள் உங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கப் படுவீர்கள்.
- உங்களுக்குப் போடப்பட்ட தையல் பிரிக்கப்பட வேண்டியிருப்பின் எந்தத் தேதியில் மீண்டும் வர வேண்டியிருக்கும் என்பதனை உங்கள் நர்ஸ் கூறுவாள். பல்வகை மருத்துவ மனையிலோ (ஜீஷீறீஹ்நீறீவீஸீவீநீ) அல்லது நிறி யிலேயோ தையலைப் பிரித்துக்கொள்ள விரும்பினால் உங்களுடைய 'டிஸ்சார்ஜ்' கடிதத்தை உடன் எடுத்துச் செல்லுங்கள்.
- நீங்கள் உங்கள் வீட்டிற்குத் திரும்பும் நாளன்று மருத்துவர் நீங்கள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டிய மருந்து வகைகளை எழுதித்தருவார். அம்மருந்து வகைகளைப் பயன்படுத்தும் முறைகளை உங்களுடைய 'நர்ஸ்' அல்லது மருந்தாளுனர் (ஜீலீணீக்ஷீனீணீநீவீst) விளக்குவார். உங்களுக்கு ஏதேனும்ஐயம் தோன்றினால், மருத்துவரையோ, நர்ஸையோ, கேட்டுத் தீர்த்துக் கொள்ளுங்கள்.
- மருத்துவ மனை யிலிருந்து நீங்கள் உங்கள் வீட்டிற்குத் திரும்பும் முன்னர் நர்ஸ் உங்களுக்கு ஒரு 'டிஸ்சார்ஜ்' கடிதம், மருத்துவ சான்றிதழ், மருத்துவரை மீண்டும் சந்திக்க வேண்டிய நாள், நேரம் குறித்த விவரம் முதலிய வற்றை அளிப்பாள். வீட்டில் ஒய்வு எடுத்துக்கொள்ள மருத்துவ விடுமுறை வழங்கப்படும்.
குடல் முளை அகற்றலுக்குப் பின்னர் நான் என்ன செய்ய வேண்டும் ?
தீவிர குடல் முளை அழற்சியின் அறுவை மருத்துவத்திற்குப் பின்னர், வழக்கத்தைக் காட்டிலும் உங்கள் குடல்கள் மெல்ல அசையக்கூடும். குறிப்பாக பிளவு (றிமீக்ஷீயீஷீக்ஷீணீtமீபீ) குடல் முளை அழற்சி விசயத்தில் இவ்வாறு நடக்கக்கூடும். மருத்துவர் உங்கள் குடலை நாள்தோறும் பரிசீலித்து நீங்கள் எவ்வவ்போது, என்னென்ன, உண்ணலாம், குடிக்கலாம் என்று திட்டமிடுவார். வழக்கமாக முதலில் உங்களுக்குப் பானியங்களும் படிப்படியாக மென்மையான உணவுப் பொருட்களும் தரப்படும். இதற்கு அறுவை மருத்துவம் முடிந்த 2-5 நாட்கள் பிடிக்கும். தீவிரமான நோயுள்ளவர்கள் விசயத்தில் இதற்கு இன்னும் அதிக காலம் பிடிக்கக்கூடும். நீங்கள் உங்கள் வீட்டிற்குத் திரும்பிய 2-3 வாரங்களுக்குப் பிறகு சிறப்புவல்லுநர் மருத்துவமனையில் (Specialist clinic) உங்கள் மருத்துவர் உங்களைப் பரிசோதிப்பார். இதற்கு முன்னர் வீட்டில் ஒய்வெடுத்துக் கொள்ள மருத்துவ விடுப்பு உங்களுக்குத் தரப்படும்.
உடல்நல மீட்புக் காலத்தில் (Recovery Period)ன் என்ன செய்ய வேண்டும் ?
மருத்துவ மனை யிலிருந்து வீடு திரும்பிய பின்னர் ஆறு வாரங்களுக்குப் பின்னரே நீங்கள் உங்களுடைய வழக்கமான செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.
பொதுவாக அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்:
1. குடல் முளை அழற்சியை அகற்றுவதில் உள்ள இடர்வளவுகள் (ஸிவீsளீs) என்னென்ன?
மற்ற எந்த அறுவை சிகிச்சையைப் போலவே குடல் முளை அகற்று அறுவை சிகிச்சையிலும் கீழ்க்கன்ட இடர்வளைவுகள் உள்ளன.
- இரத்தக்கசிவு
- தொற்று நோய்
- மருந்துகளால் உண்டாகும் எதிர் விளைவுகள் (ஸிமீணீநீtவீஷீஸீ)
2. குடல் முளை அகற்றுச் சிகிச்சையில் உள்ள சிக்கல்கள் (சிஷீனீஜீறீவீநீணீtவீஷீஸீs) என்னென்ன ?
குடல் முளை அகற்று அறுவைச்சிகிச்சையிலுள்ள மிக பொதுவான சிக்கல் என்னவென்றால் அறுவை காயத்தில் தொற்று நோய்கள் பீடிப்பதாகும். அந்தத் தொற்று நோய் (infection) இரண்டு வகைப்படும். மேற்போக்கான தொற்று நோய் காயத்தற்கு மருந்து பூசிகட்டுப் போடுவதால் குணமாகும். ஆழமான தொற்று நோய் குணமாக அறுவைசிகிட்சை தேவைப்படும்.
அடுத்த பெருஞ் சிக்கல் என்னவென்றால் சீழ்க்கட்டி அல்லது கழலை யாகும் குடல் முளை இருந்த இடத்தினைச் சுற்றி சீழ் உண்டாவதாகும். இதற்கு சீழை அகற்றுவது இன்றியமையாததாகும்.
மூன்றாவது முக்கிய சிக்கல் குடலில் ஏற்படும் அடைப்புகளாகும். இதனால் குடல் திரவத்தாலும், வாயுவாலும் நிரம்பி விடும். இது ஏற்பட்டால் மூக்கின் அல்லது தொண்டையின் வழியே வயிற்றுக்குள் ஒரு ரப்பர் குழாயை இறக்கி குடலில் உள்ள அடைப்புப் பொருட்களை அகற்ற வேண்டும். பெரும்பாலான விசயங்களில் இந்த அடைப்புகள் இயற்கையாகவே நீங்கி விடும். சில சமயங்களில் இத்தடைகளை அகற்ற மற்றொரு அறுவை சிகிட்சை செய்ய வேண்டியிருக்கும். 3. பாதிக்கப்பட்ட குடல் வளை அழற்சி அகற்றப்படா விட்டால் என்ன ஆகும் ?
குடல் முளை ஆழற்சி முதிர்ந்துவிட்டால் குடல் முளை வெடித்துத் தொற்றுக் கிருமிகள் அடிவயிற்றுப் பகுதியின் எல்லாப் பகுதிகளிலும் பரவி விடும். முதிர்ந்த குடல் முளை அழற்சி குணப்படுத்தப் படாவிட்டால் மரணம் ஏற்படும். 4. அறுவை சிகிட்சையின்போது குடல் முளை சாதாரணமாக இருப்பதைச் காண நேரிட்டால் என்ன ஆகும் ?
முதிர்ந்த குடல் முளை அழற்சி இருப்பதாக பரிசோதனையில் உறுதியானதும் நோயாளிக்கு அறுவை சிகிச்சை நடை பெறும் அரிதாக சில சமயங்களில் அறுத்துப் பார்க்கும்போது குடல் வளை சாதாரணமாகவே இருக்கும். நோய் வரலாறு, உடல் பரிசோதனை, 'லேப்' பரிசோதனைகளின் முடிவுகள் மூலம் குடல்முளை அழற்சிதான் என்று அறுதியிட்ட பின்னரே வழக்கமாக மருத்துவர். அறுவை சிகிட்சையை மேற்கொள்வார். அப்படியிருப்பினும் அறுவை சிகிட்சை நடைபெறும் போது குடல் முளை சாதாரணமாக இருக்கக்கூடும். அத்தகைய சூழ் நிலைகளில் மருத்துவர் அத்தகைய போலி குடல்முளை அழற்சிச்சிக்கல் ஏற்பட்டதற்கான பிற காரணங்களை ஆராயவேண்டும். குடல் முளை சாதாரணமாக இருப்பினும், பொதுவாக பிற்காலத்தில் அதில் அழற்சி தோன்றாமலிருக்க அறுத்து அகற்றப்படும். 5. நான் எப்போது காரை ஒட்டலாம் ?
மிக அதிக வலி ஏற்படாமல் உங்களால் நேராக உங்கள் கால்களின் மேல் நிற்க முடியும் போதும், மயக்கத்தினை உண்டாக்கும் வலி நிவாரண மருந்து, மாத்திரைகள் தேவையில்லாமற் போகும் போதும் நீங்கள் காரை ஒட்டலாம். 6. நான் எப்போது என் வழக்கமான பணிகளில் ஈடுபடலாம் ?
பெரும்பாலான நோயாளிகள் குடல்முளை அழற்சி அகற்ற அறுவை கிசிட்சைக்குப்பின்னர் 14 நாட்கள் பணிகளுக்குத் செல்லாமல் ஒய்வு எடுத்துக் கொள்வார்கள். கடுமையான உழைப்பு, அடிக்கடி லிப்டுகளில் ஏறி இறங்கும் தன்மையுடைய பணிகளில் ஈடுபட்டுள்ள நோயாளிகள் இன்னும் சற்று காலம் ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். தெளிவான அறிவுரைகளுக்கு உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள்.
7. நான் மீண்டும் எப்போது மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும் ?
- உங்கள் உடல் வெப்பநிலை 38குதி க்கு அதிக மானாலும்.
- அறுக்கப்பட்ட இடத்தில் சீழ் வடிந்தாலும்.
- காயத்தில் பொறுக்க முடியாவலியோ, வீக்கமோ, புண்ணோ ஏற்பட்டாலும்.
- அறுக்கப்பட்ட பகுதி அளவுக்கதிகமாகக்கன்றிப் போனாலும், வீங்கினாலும்.
- தொடர்ந்து குமட்டினாலும் வாந்தி வந்தாலும் பேதியானாலும் மலச் சிக்கல் ஏற்பட்டாலும். - உடனடியாக உங்கள் மருத்துவரைச் சந்தித்துக் கலந்தாலோ சியுங்கள்.
|